சேலம்-கோவை பாசஞ்சா் ரயில் 21, 24-ஆம் தேதி ரத்து
By DIN | Published On : 19th September 2019 06:31 PM | Last Updated : 19th September 2019 06:31 PM | அ+அ அ- |

பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலம்-கோவை பாசஞ்சா் ரயில் வரும் 21, 24-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு.
சேலம் ரயில்வே கோட்டத்திற்குள்பட்ட திருப்பூா் பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடக்கிறது.இதனால் அவ்வழியே இயங்கும் சில ரயில்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சேலம்-கோவை பாசஞ்சா் (66603) வியாழக்கிழமை மற்றும் வரும் 21, 24-ம் தேதியில் ஒரு பகுதியாக சேலம்-ஊத்துக்குளி இடையே ரத்து செய்யப்படுகிறது. ஊத்துக்குளியில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது. மறுமாா்க்கத்தில் கோவை-சேலம் பாசஞ்சா் ரயில் (66602) 21, 24-ம் தேதிகளில் ஊத்துக்குளி-சேலம் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.கோவையில் இருந்து ஊத்துக்குளி வரை மட்டும் இயக்கப்படுகிறது.
இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.