வழித்தட பிரச்னை: 3 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் வழித்தட பிரச்னையால் 3 பேர் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர்.

சேலத்தில் வழித்தட பிரச்னையால் 3 பேர் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர்.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு நாழிக்கல்பட்டி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த தங்கராஜ், அவரது தாயார் பாப்பா மற்றும் பெரியம்மா லட்சுமி ஆகியோர் மனு அளிக்க வந்தனர்.
அப்போது திடீரென அவர்கள் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இதைக்கண்டு அவர்களை தடுத்து நிறுத்தி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். 
அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் உறவினர்களுக்கும், எங்களுக்குமிடையே வழித்தட பிரச்சனை உள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது எங்கள் வீட்டிற்கு செல்லும் வழித்தடத்தை உறவினர்கள் தனம், சின்னையன் ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும்போதெல்லாம் தகராறு ஏற்படுகிறது. இதுகுறித்து நாங்கள் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நாங்கள் தீக்குளிக்க முயன்றோம் என்றனர்.  
இதைக்கேட்ட போலீஸார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக  உறுதியளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com