Enable Javscript for better performance
சேலம் ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு சோதனையில் ரூ. 5.91 கோடி அபராதம் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு சோதனையில் ரூ. 5.91 கோடி அபராதம் வசூல் 

    By DIN  |   Published on : 25th September 2019 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 5 மாதங்களில் பயணச்சீட்டு சோதனையில் ரூ.5.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    சேலம் ரயில்வே கோட்டத்தில் பயணிகள் உரிய பயணச்சீட்டு எடுத்து பயணிக்கவும், பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதால் ரயில்வே துறைக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க அடிக்கடி பயணச்சீட்டு சோதனை நடத்தப்படுகிறது.
    அந்த வகையில் அனைத்துப் பயணிகளும் உரிய பயணச்சீட்டு எடுத்து பயணிப்பதை உறுதி செய்யும் வகையில், சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிக பிரிவு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயணச்சீட்டு சோதனையில் ரூ. 1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 3,846 வழக்குகளில் ரூ. 16.47 லட்சமும், உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு மற்றும் குளிர்சாதன வகுப்புப் பெட்டிகளில் பயணித்ததாக 22,994 வழக்குகளில் ரூ. 97.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.  மேலும் ரயில்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக உடைமைகளை எடுத்து வந்ததாக 499 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1.84 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. நிகழாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத காலகட்டங்களில் ரூ.5.91 கோடி அபராதம் வசூலித்துள்ளது. இதில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 20,714 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 88.89 லட்சமும், உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணித்ததாக 1,16,463 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 4.92 கோடியும், பயணிகள் அளவுக்கதிகமாக உடைமைகளை எடுத்து வந்ததாக 2,642 வழக்குகள் பதிவு செய்து ரூ. 10.36 லட்சமும் என மொத்தம் ரூ. 5.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2018 ஆம் ஆண்டை காட்டிலும் சுமார் 47 சதவீதமாகும். கடந்த 2018 இல் ரூ.4.02 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.மேலும் ரயில் நிலையங்களில் குப்பைகளை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.46,015 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் கூறியது:
    சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் அனைவரும் உரிய பயணச்சீட்டு பெற்று பயணிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.கடந்த 2018 இல் மேற்கொள்ளப்பட்ட பயணச்சீட்டு சோதனையில் ரூ.4.02 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 2019 இல் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டங்களில் ரூ.5.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது சுமார் ரூ.2 கோடிக்கு அதிகமாகும்.ரயில் நிலையங்களில் குப்பைகளை போடுவோரிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். ரயில் நிலையங்களில் கடந்த செப்.14 முதல் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வரை தூய்மை பிரசார நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai