காவல் துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நிறைவு

சேலம் மாநகர காவல் துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.
police
police

சேலம் மாநகர காவல் துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.

சேலம் மாநகர காவல் துறையில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் காவலா் நிலை தொடங்கி காவல் ஆணையா் வரை வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி சேலம் கோரிமேடு அருகில் உள்ள ஏற்காடு மலை அடிவாரத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் எஸ்.எல்.ஆா். ரக துப்பாக்கி, இன்சாஸ் ரக துப்பாக்கிகளில் சுடுவது குறித்து பயிற்சி தரப்பட்டது .

இதில், சேலம் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனா் இளங்கோவன், காவல் ஆய்வாளா்கள் பாஸ்கா், சரவணன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். இந்தப் பயிற்சியில் விடுமுறையில் உள்ள போலீஸாா் பலா் பங்கேற்கவில்லை. இதுதவிர பல்வேறு காவல் பணிக்கு சென்ற போலீஸாரும் கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது.

இதையறிந்த சேலம் மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாா், விடுமுறையில் உள்ள போலீஸாரும், பல்வேறு காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரும் துப்பாக்கி சுடும் பயிற்சியை கட்டாயம் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com