பி.என்.பட்டி பேரூராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி: ஆட்சியர் ஆய்வு

மேட்டூர் அருகே பி.என். பட்டி பேரூராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் ஆய்வு செய்தார்.

மேட்டூர் அருகே பி.என். பட்டி பேரூராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் ஆய்வு செய்தார்.
செவ்வாய்க்கிழமை பி.என். பட்டி பேரூராட்சிக்கு வந்த அவர்
7-ஆவது வார்டு மற்றும் 8-ஆவது வார்டு பகுதியில் ஆய்வு செய்தார். வீடுகளில் நுழைந்து பழைய டயர்கள் மற்றும் தேங்கிய நீரில் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் சார் ஆட்சியர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட திட்ட இயக்குநர் அருள்ஜோதி, மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் பூங்கொடி, பி.என். பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர். பி.என். பட்டி பேரூராட்சியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளாத 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் கலைராணி
தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com