வெள்ளத்தில் சென்றது பாலம்

இடையப்பட்டியில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள தற்காலிக பாலம் செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இடையப்பட்டியில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள தற்காலிக பாலம் செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால்,10 மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்படைந்தது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள இடையப்பட்டியில் மிகப் பழமையான குறுகிய பாலம் இருந்தது.
இந்தப் பாலம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதனால், அப் பகுதி மக்கள் பாலத்தைப் பெரிதுபடுத்தி தர வேண்டி முதல்வருக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து அந்தப் பாலத்துக்குப் பதிலாக மாற்றுப் பாதை அமைத்து பாலத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கருமந்துறை மற்றும் மலைக் கிராமங்களில் மட்டுமல்லாமல் இடையப்பட்டி,கரியகோயில் அணை உள்ள பகுதிகளிலும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், திங்கள்கிழமை வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடையப்பட்டி தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. இதனால், போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 10 மணி நேரம் போராடி பாதையை சீர் செய்ததை அடுத்து பாலம் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மீண்டும் திறந்து விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com