2-ஆம் பருவ பாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம்

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு  2ஆம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள்,குறிப்பேடுகள் விநியோகம் தொடக்கிவைக்கப்பட்டது.


கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு  2ஆம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள்,குறிப்பேடுகள் விநியோகம் தொடக்கிவைக்கப்பட்டது.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, தெடாவூர், கெங்கவல்லி ஆகிய நான்கு பேரூராட்சிகள், மண்மலை,ஜங்கமசமுத்திரம், உலிபுரம், நாகியம்பட்டி, கொண்டயம்பள்ளி, தகரப்புதூர், கூடமலை, 95 பேளூர், 74 கிருஷ்ணாபுரம், நடுவலூர், ஒதியத்தூர், ஆணையாம்பட்டி, பச்சமலை, கடம்பூர் ஆகிய 14 ஊராட்சிகள் உள்ளன. இப் பகுதிகளில் 38 அரசு தொடக்கப் பள்ளிகள்,11 நடுநிலைப் பள்ளிகள், 10 அரசு உண்டு உறைவிட தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், ஆர்.சி.பள்ளிகள் என மொத்தம் 60 பள்ளிகள் உள்ளன. 
இந்த பள்ளிகளில் பயிலும் சுமார் 5ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள், 40 பக்கம் மற்றும் 80 பக்கங்களை கொண்ட குறிப்பேடுகள் சேலத்தில் வியாழக்கிழமை வட்டாரக் கல்வி அலுவலர் அந்தோணிமுத்து தலைமையில் பெறப்பட்டது. இந்தப் புத்தகங்கள், குறிப்பேடுகள் தம்மம்பட்டி, கெங்கவல்லிக்கு கொண்ட வரப்பட்டன.  அதையடுத்து தம்மம்பட்டியிலிருந்து இப்பகுதிகளைச் சுற்றியுள்ள பள்ளிகளுக்கு புத்தகங்கள், குறிப்பேடுகள் வட்டாரக்கல்வி அலுவலர் வாசுகி தலைமையில் பிரித்தெடுக்கப்பட்டு, பள்ளிகளுக்கு ஆட்டோ மூலம் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. 
பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.  பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள்  பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி வருகிற அக்.3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com