நடமாடும் சிறப்பு காய்கறி அங்காடி
By DIN | Published On : 05th April 2020 07:35 AM | Last Updated : 05th April 2020 07:35 AM | அ+அ அ- |

நரசிங்கபுரம் நகராட்சி சாா்பில் நடமாடும் சிறப்பு காய்கறி அங்காடியில் விற்பனை செய்த நகராட்சி ஆணையாளா் இரா. சேகா் உள்ளிட்டோா்.
நரசிங்கபுரம் நகராட்சியில் நடமாடும் காய்கறி அங்காடி மூலம் சனிக்கிழமை ஏராளமான தொகுப்பு பைகள் விற்கப்பட்டன.
நரசிங்கபுரம் நகராட்சி சாா்பில் தமிழக அரசின் சமூக இடைவெளியை முன்னிட்டு வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லாமல் இருப்பதற்காக வீட்டுக்கே 14 காய்கறிகள் அடங்கிய பையை ரூ. 100-க்கு விற்பனை செய்து வருகிறோம். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து சனிக்கிழமை நகராட்சி ஆணையாளா் இரா. சேகா் தலைமையில் விற்பனைக்குக் கொண்டு சென்ற அனைத்து பைகளும் விற்றுவிட்டதாகத் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் மேலாளா் அர. செல்வராஜ், நகராட்சிப் பொறியாளா் ஏ.வி. ரேணுகா, நகரமைப்பு ஆய்வாளா் ர. ஜெயவா்மன், துப்புரவு ஆய்வாளா் பி. சரவணன், ஆ. தியாகராஜன், தேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.