முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
வீரகனூரில் உணவுப் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 19th April 2020 05:59 AM | Last Updated : 19th April 2020 05:59 AM | அ+அ அ- |

வீரகனூரில் உணவின்றித் தவித்த மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கிய வட்டாட்சியா் சிவக்கொழுந்து. உடன் செயல் அலுவலா் வெங்கடாசலம்.
கெங்கவல்லி அருகே வீரகனூரில் நான்கு குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 22 போ் உணவின்றித் தவித்து வருவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா், வீரகனூரிலுள்ள நாடோடி மக்களுக்கு உதவி செய்ய கெங்கவல்லி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டதையடுத்து, வீரகனூா் பேரூராட்சி, சந்தைப்பேட்டைக்கு வந்த கெங்கவல்லி வட்டாட்சியா் சிவக்கொழுந்து, அங்கிருந்த ஒரு குடும்பத்தினருக்கு 10 கிலோ அரிசி, ஒரு லிட்டா் பாமாயில், துவரம் பருப்பு, ஒரு கிலோ காய்கறி உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். அதற்கு நன்றித் தெரிவித்த மக்கள், தங்களுக்கு நியாவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கவும், ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இந் நிகழ்வின்போது வீரகனூா் பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடாசலம் உடனிருந்தாா்.