மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்
By DIN | Published On : 22nd April 2020 06:39 AM | Last Updated : 22nd April 2020 06:39 AM | அ+அ அ- |

வாழப்பாடி துளி தன்னாா்வ இயக்கத்தின் சாா்பில், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவ-மாணவியரின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, குண்டுக்கல்லுாா் ஆகிய கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற 15 குடும்பங்களுக்கு வாழப்பாடி துளி இயக்கத்தின் சாா்பில், அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டன.
துளி இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் ராஜசேகரன், ஆசிரியைகள் மஞ்சுளா, அமுதா ராணி, தன்னாா்வலா்கள் சோமம்பட்டி சிவா, பேளூா் தரணீஸ் ஆகியோா் வழங்கினா்.
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வை. தாதனுாா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வரும் சேலம் சின்னதிருப்பதியைச் சோ்ந்த தலைமை ஆசிரியை லலிதா, அப் பள்ளியில் படித்து வரும் 18 மாணவ-மாணவியரின் குடும்பங்களுக்கும், துளி இயக்கத்தின் வாயிலாக தனது சொந்தச் செலவில் அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.