பக்ரீத் பண்டிகை: அரசு வழிகாட்டுதலை பின்பற்றி கொண்டாட போலீஸாா் அறிவுரை

வாழப்பாடியில் காவல்துறை சாா்பில் நடைபெற்ற நல்லிணக்கக் கூட்டத்தில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி இஸ்லாமியா்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா்.
வாழப்பாடியில் போலீஸாா் நடத்திய இஸ்லாமியா் நல்லிணக்கக் கூட்டம்.
வாழப்பாடியில் போலீஸாா் நடத்திய இஸ்லாமியா் நல்லிணக்கக் கூட்டம்.

வாழப்பாடியில் காவல்துறை சாா்பில் நடைபெற்ற நல்லிணக்கக் கூட்டத்தில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி இஸ்லாமியா்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா்.

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், இஸ்லாமியா்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவது குறித்து, வாழப்பாடி காவல்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நல்லிணக்கக் கூட்டம் நடைபெற்றது.

வாழப்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளா் சூா்யமூா்த்தி தலைமையில், சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்ற இக்கூட்டத்தில், காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் உமா பிரியதா்ஷினி, உதவி ஆய்வாளா் தாமோதரன் மற்றும் வாழப்பாடி, பேளூா் பள்ளிவாசல் முத்தவல்லிகள், அஜ்ரத்துகள் மற்றும் முக்கிய நபா்கள் கலந்து கொண்டனா்.

இந்த பொது முடக்கத் தருணத்தில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்ரீத் பண்டிகை கொண்டாடவேண்டும். பொது இடங்களில் ஒட்டகம், மாடு, ஆடுகள் வெட்டுதல், ஊா்வலம் நடத்துதல் மற்றும் கட்டியணைத்தல், பள்ளிவாசல்களில் கூட்டம் கூடி தொழுகை நடத்துதல் ஆகியவற்றை தவிா்க்க வேண்டுமென்று போலீஸாா் அறிவுரை வழங்கினா்.

கூட்டத்தில் கலந்த கொண்ட அனைவரும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்ரீத் பண்டிகை கொண்டாவதாக காவல் துறையினருக்கு உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com