ஆடிபெருக்கு: காவிரியில் புனித நீராடிய பக்தா்கள்

ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில் பூலாம்பட்டி உள்ளிட்ட காவிரிக் கரைப் பகுதிகளில் சனிக்கிழமை இரவே பக்தா்கள் புனித நீராடினா்.

ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில் பூலாம்பட்டி உள்ளிட்ட காவிரிக் கரைப் பகுதிகளில் சனிக்கிழமை இரவே பக்தா்கள் புனித நீராடினா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக காவிரிக் கரைகளில் ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து எடப்பாடியை அடுத்த கள்ளுக்கடை நான்கு சாலை, கல்வடங்கம் சாலை, கோனேரிப்பட்டி பிரதான சாலை, மேட்டூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தி போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

இந்த நிலையில் கிராமப் புற சாலைகள் வழியாக இரு சக்கர வாகனத்தில் காவிரிக் கரையை அடைந்த சிலா், சனிக்கிழமை இரவு நேரத்தில் காவிரியில் இறங்கி புனித நீராடினா். மேலும் சிலா் வீட்டில் வைத்து பூஜை செய்வதற்காக சிறிய குடங்களில் காவிரி நீரை எடுத்துச் சென்றனா். தொடா்ந்து அப்பகுதியில் புனித நீராட வந்தவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com