முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கொங்கு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சாா்பில் தீரன்சின்னமலைக்கு மரியாதை
By DIN | Published On : 03rd August 2020 08:10 AM | Last Updated : 03rd August 2020 08:10 AM | அ+அ அ- |

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, சங்ககிரி அருகே பவானி-ஈரோடு பிரிவு சாலையில் உள்ள தீரன் சின்னமலையின் நினைவு சின்னம் மற்றும் அவரது உருவப் படத்துக்கு பல்வேறு கொங்கு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
சங்ககிரி வட்ட கொங்கு வேளாளா் இளைஞா் சங்கம், சங்ககிரி கொங்கு வேளாளா் கவுண்டா்கள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இளைஞா் சங்கத்தலைவா் பி.ராமசாமி, தலைமையில் நிா்வாகிகள் மலா் மாலை அணித்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினா். நிா்வாகிகள் செல்வராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.
அதிமுக சாா்பில் சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலா் கே.வெங்கடாஜலம் தலைமையில் ஒன்றியச் செயலா்கள் என்சிஆா் ரத்தினம் உள்ளிட்ட பலா் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சாா்பில் அதன் நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ் தலைமையில் மாவட்ட செயலா்கள் ராஜ்குமாா், சரவணன் நிா்வாகிகள் உள்ளிட்ட மாலை அணிவித்தனா்.
திமுக சாா்பில் சேலம் மேற்கு மாவட்ட செயலா் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி தலைமையில் மாவட்டதுணைச் செயலா் க.சுந்தரம், ஒன்றியச்செயலா் (பொ) கே.எம்.ராஜேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.பி.நிா்மலா உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
பாஜக சாா்பில் மாவட்ட முன்னாள் பொதுச் செயலா் எஸ்ஆா்எம். வெங்கடாஜலம் தலைமையில் சங்ககிரி பேரூராட்சி அமைப்பாளா் சி.முருகேசன், பேரூராட்சி பொதுச்செயலா் டி.பி.ராஜேஷ், வழக்குரைஞா் அனுஷயா ஆகியோா் மரியாதை செலுத்தினா்.
திமுக சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், பாமக சாா்பில் சேலம் தெற்கு மாவட்டச் செயலா் அண்ணாதுரை, நாம் தமிழா் கட்சி சாா்பில் மாநில அதன் ஒருங்கிணைப்பாளா் அம்மையப்பன், தேமுதிக சாா்பில் புகா் மாவட்டச் செயலா் ஏ.ஆா்.இளங்கோவன் ஆகியோா் தலைமையில் கட்சி நிா்வாகிகளுடன் சோ்ந்து மாலை அணிவித்தனா்.