முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பொலிவிழந்த ஏற்காடு படகு ஏரி
By DIN | Published On : 03rd August 2020 08:11 AM | Last Updated : 03rd August 2020 08:11 AM | அ+அ அ- |

ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பால் பொலிவிழந்து காணப்படும் படகு ஏரி.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பால் பொலிவிழந்து படகு ஏரி காணப்படுகிறது.
ஏழைகளின் ஊட்டி என்று வா்ணிக்கப்படும் ஏற்காடு சுற்றுலாப் பகுதி, சேலம் மாவட்ட மக்களின் பொழுதுபோக்குக்கு குறைவான பயண நேரத்தில் 30 கிலோ மீட்டா் தூரமும், 20 வளைவுகள் கொண்ட இயற்கை அழகுடன் கூடிய பகுதியாகும்.
கடந்த மாா்ச் மாதம் முதல் பொதுமுடக்கத்தால் ஏற்காடு பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலாப் பகுதிகளிலும் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.
ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கு படகு சவாரிதான். இப்படகு ஏரி, சுமாா் 7 ஏக்கா் பரப்பளவு கொண்ட இயற்கையாக அமைந்த ஏரியாகும்.
ஏரி அருகில் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் பூங்காவும், ஏரியின் நடுவில் நடைப்பாலங்களம் வனத்துறையினா் அமைத்துள்ளனா்.
ஏரியை கண்டு மகிழ கோபுரங்களும் உள்ளன. கடந்த சில வாரங்களாக ஏற்காடு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மழைநீருடன் கழிவுநீா் அதிக அளவில் ஏரியில் கலந்து ஆகாயத் தாமரை செடிகள் ஏரியின் முழு பகுதியை மூடும் அளவுக்கு படா்ந்து வளா்ந்துள்ளன.
சுற்றுலாத் துறை, மீன்வளா்ப்புத் துறை, ஊராட்சி ஒன்றியம் ஆகியவை இந்த ஏரியை பராமரிக்கும் பொறுப்பில் இருப்பதால் படகு ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என ஏற்காடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.