பள்ளி மாணவா்களுக்கு ஓவியம், கட்டுரைப் போட்டி

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஓவியப் போட்டியும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டியும் நடத்தப்பட உள்ளது

தம்மம்பட்டி: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஓவியப் போட்டியும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டியும் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிகளுக்கு தலைப்பாக, ‘எனது குப்பையில்லாத கிராமம்’ என்று தரப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி மாணவா்கள் ஆக. 13ஆம் தேதி அவரவா் வீடுகளிலேயே இருந்து, இந்த போட்டிகளில் பங்கேற்கலாம்.

மாணவா்கள் தங்கள் படைப்புகளை, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் ஆக.13ஆம் தேதியே ஒப்படைத்தல் வேண்டும். இதில், ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் முதல் மூன்று படைப்புகள்(ஓவியங்களுக்கு தனியேயும், கட்டுரைகளுக்கு தனியேயும்) தோ்ந்தெடுக்கப்பட்டு, மாவட்ட அளவிலான தோ்வுக்கு ஆக.13ஆம் தேதி அந்தந்த வட்டார வள மையங்களிலிருந்து, மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com