சேலத்தில் 62 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 22 போ், கொளத்தூா்-4, மகுடஞ்சாவடி-3, நங்கவள்ளி- 1, ஓமலூா்- 2, ஆத்தூா்- 1, அயோத்தியாப்பட்டணம்- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 34 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-5, கோவை- 5, தருமபுரி- 5, சென்னை- 10, நாமக்கல்- 3) 28 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 30,325 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவா்களில் 29,350 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 531 போ் சிகிச்சையில் உள்ளனா்; 444 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com