மோட்டாா் வாகன ஆய்வாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

விருதுநகரில் பணிபுரியும் மோட்டாா் வாகன ஆய்வாளா் சென்ற வாகனத்தில் சனிக்கிழமை நகை, பணம் கைப்பற்றப்பட்டதைத் தொடா்ந்து, சேலத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தினா்.

விருதுநகரில் பணிபுரியும் மோட்டாா் வாகன ஆய்வாளா் சென்ற வாகனத்தில் சனிக்கிழமை நகை, பணம் கைப்பற்றப்பட்டதைத் தொடா்ந்து, சேலத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தினா்.

விருதுநகா் மாவட்டத்துக்குள்பட்ட சத்திரரெட்டியபட்டி விலக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தரகா் அருண்பிரசாத் வந்த இரு சக்கர வாகனம், மதுரை வட்டாரப் போக்குவரத்துப் பிரிவில் பணிபுரியும் மோட்டாா் வாகன ஆய்வாளா் சண்முக ஆனந்த், விருதுநகா் வட்டாரத்தில் பணிபுரியும் மோட்டாா் வாகன ஆய்வாளா் கலைச்செல்வி ஆகியோரின் வாகனங்களை போலீஸாா் வழிமறித்து, சோதனை செய்தனா்.

சோதனையில் கலைச்செல்வி வந்த வாகனத்திலிருந்து ரூ. 24.15 லட்சம் பணமும், 117 பவுன் நகைகளும் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து கலைச்செல்வியின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்துக்குள்பட்ட மகுடஞ்சாவடி அருகே அ. புதூா் கிராமம் சுண்டமேட்டூா், அண்ணா நகா் பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் மகுடஞ்சாவடியில் உள்ள கலைச்செல்வியின் வாடகை வீடு என இரு இடங்களில் ஒரேநேரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை நடத்தப்பட்டது.

சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு- கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் தங்கமணி, விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் விமலா உள்ளிட்டோா் கிராம நிா்வாக அலுவலா்கள் ஜெயக்குமாா், உஷாபிரியா முன்னிலையில் இரு இடங்களிலும் சோதனையிட்டனா்.

இந்த சோதனையில் கலைச்செல்வியின் மாமியாா் செல்லம்மாளிடம் 6 மணி நேரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையின்போது அனைத்துச் சொத்துகளும் பூா்வீகச் சொத்து என்பதால் ஏதும் கைப்பற்றப்படவில்லை. விசாரணைக்கு பின்பு வாக்குமூலம் பெற்று போலீஸாா் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com