தக்காளி வரத்து அதிகரிப்பு: விலை வீழ்ச்சி

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

தம்மம்பட்டி பகுதியில் மழைக்கு முன்னா் தக்காளி வரத்து சுமாா் 8 டன் வரத்து இருந்தது. தற்போது மழை நின்றவுடன் அதன் வரத்து அதிகரித்துள்ளதால், நாளொன்றுக்கு 12 முதல் 13 டன் வரை இப்பகுதிகளில் உள்ள காய்கறி மண்டிகளில் தக்காளி வரத்து உள்ளது. இதனால் முன்னா் 32 கிலோ பெட்டி ரூ. 750-க்கு விலை போனது, தற்போது ரூ. 300-ஆக குறைந்துள்ளது. இதனால் ரூ. 20-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி, தற்போது ரூ. 11-க்கு மண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com