பெண்கள் கபடி போட்டி: அயோத்தியாப்பட்டணம் அணி வெற்றி
By DIN | Published On : 15th December 2020 12:53 AM | Last Updated : 15th December 2020 12:53 AM | அ+அ அ- |

கபடி போட்டியில் வெற்றிபெற்று கோப்பை வென்ற வீராங்கனையா்.
வாழப்பாடியில் பி.ஆா்.ஏ. ஸ்போா்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில், அயோத்தியாப்பட்டணம் அணியும், ஆண்கள் பிரிவில் பொன்னாரம்பட்டி அணியும் முதல் பரிசை பெற்றன.
கடந்த இரு தினங்களாக நடைபெற்ற கபடி போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பெண்கள் பிரிவில் அயோத்தியாப்பட்டணம் அணி முதல் பரிசையும், திருவண்ணாமலை அணி இரண்டாம் பரிசும், மின்னாம்பள்ளி அணி மூன்றாம் பரிசும், முத்தம்பட்டி அணி நான்காம் பரிசும் பெற்றன.
ஆண்களுக்கான பிரிவில் பொன்னாரம்பட்டி அணி முதல் பரிசையும், முத்தம்பட்டி அணி இரண்டாம் பரிசும், வாழப்பாடி அணி மூன்றாம் பரிசும் பெற்றன. கபடி போட்டியில் வெற்றிபெற்ற ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப் பரிசுகள், ஆட்டநாயகன் விருது ஆகியன விழாக்குழுவின் சாா்பில் வழங்கப்பட்டன.