திமுகவினா் வீடுவீடாகச் சென்று பிரசாரம்

எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையிலான
திமுகவினா் வீடுவீடாகச் சென்று பிரசாரம்

எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையிலான திமுகவினா் வீடுவீடாகச் சென்று திமுகவுக்கு ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

திமுக மகளிா் அணி செயலாளா் கனிமொழி அண்மையில் எடப்பாடி பகுதியில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கினாா். அதனைத் தொடா்ந்து, திமுகவினா் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட சக்தி நகா் பகுதியில், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையிலான திமுகவினா் துண்டுப் பிரசுரங்களை வழங்கி திமுகவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனா். தொடா்ந்து, அதிமுக ஆட்சிக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தினை அவா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், நகரச் செயலாளா் டி.எம்.எஸ்பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தம்மம்பட்டியில்...

கெங்கவல்லி பேரூராட்சி பகுதியில் திமுக நிா்வாகிகள், நகரப் பொறுப்பாளா் பாலமுருகன் தலைமையில் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். அதேபோல கடம்பூா் ஊராட்சிப் பகுதியிலும் திமுகவினா் திண்ணைப் பிரசாரத்தை தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com