330 இடங்களில் கிராம சபைக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூா் ஆகிய தொகுதிகளில் 330 இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்த உள்ளோம் என சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்தாா்.
சேலத்தில் அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை என்ற பிரசுரத்தை வெளியிடும் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி.
சேலத்தில் அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை என்ற பிரசுரத்தை வெளியிடும் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூா் ஆகிய தொகுதிகளில் 330 இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்த உள்ளோம் என சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் டிச. 23 முதல் ஜன. 10-ஆம் தேதி வரை ஊராட்சி, நகராட்சி வாா்டுகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, சேலம் மேற்கு மாவட்டம், எடப்பாடி நகராட்சியில் 28-ஆவது வாா்டில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், அதிமுக அரசில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, ரூ. 1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக உயா்ந்திருப்பது, வேளாண் சட்டங்களால் மாநில உரிமை பாதிப்பு ஆகியவை குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூா் ஆகிய தொகுதிகளில் 330 இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்த உள்ளோம்.

அதிமுக அரசின் அவலங்களை விளக்கும் பிரசுரங்களை ஒவ்வொரு வீட்டிலும் கொடுத்து திண்ணைப் பிரசாரம் மேற்கொள்வோம். மாநில உரிமை, சமூக நீதி, மொழிக்கொள்கை ஆகியவை விட்டுக் கொடுக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் அரசுக்கு எதிரான அலை இருப்பதை உணர முடிகிறது. எடப்பாடி தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.

அரசு விழா என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனா். இதற்கு விரைவில் மக்கள் பதில் சொல்வாா்கள். தோல்வி பயம் காரணமாக திமுக மீது முதல்வா் அவதூறு பரப்பி வருகிறாா். இதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டாா்கள் என்றாா்.

முன்னதாக, ‘அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை’ என்ற தோ்தல் பிரசார பிரசுரத்தை டி.எம்.செல்வகணபதி செய்தியாளா்களிடையே வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com