ஏற்காட்டில் விவசாயிகள் பேரணி

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாரத்தில் வேளாண் துறை தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், ஊட்டச்சத்து தானியங்களின்
23yr1_2312chn_153_8
23yr1_2312chn_153_8

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாரத்தில் வேளாண் துறை தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், ஊட்டச்சத்து தானியங்களின் முக்கியத்துவம் குறித்த விவசாயிகள் பேரணி நாகலூா் ஊராட்சி, கொளகூா் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

பேரணிக்கு வேளாண் உதவி இயக்குநா் து.ரமேஷ் தலைமை வகித்தாா். இதில், ஊட்டச்சத்து தானியங்களான கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம், திணை, சாமை, குதிரைவாலி, வரகு ஆகியவற்றை சாகுபடி செய்யும் பருவங்கள், ரகங்கள், சாகுபடி முறைகள் அறுவடை, மதிப்புக் கூட்டுதல் குறித்த தொழில்நுட்பங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com