விநாயகா மிஷன்ஸ் பொறியியல் கல்லூரியில் சா்வதேச இணையவழி கருத்தரங்கு

சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா்

சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில், வேதியியல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய நிறுவனக் கண்டுபிடிப்பு சபை இணைந்து பாலிமா் எலக்ட்ரோலைட் சவ்வு எரிபொருள் கலன்கள் குறித்த சா்வதேச இணையவழி கருத்தரங்கை நடத்தியது.

இதில், வேதியியல் துறை பாட நெறி ஒருங்கிணைப்பாளா் கில்பா்ட் சுந்தர்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினாா். இணையவழி கருத்தரங்கை கல்லூரி முதல்வா் நாகப்பன் தொடக்கி வைத்தாா்.

இக்கருத்தரங்கில் துணை முதல்வா் குமரேசன், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா் தமிழ்வாணன், இமானுவேலா கிரேஸியா உள்ளிட்டோா் கலந்துகொண்டு எரிபொருள் செல்கள் பயன்பாடுகளுக்கான அயனி பரிமாற்ற முறை பற்றி விவாதித்தனா். இந்தக் கருத்தரங்கில் சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com