ஆத்தூரில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
By DIN | Published On : 25th December 2020 09:25 AM | Last Updated : 25th December 2020 09:25 AM | அ+அ அ- |

ஆத்தூரில் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் டி.வானவில் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி, அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன், அதிமுக முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் டி.எம்.ராமலிங்கம், ஜி.முரளிசாமி, பி.கலியன், க.இளங்கோ, விடுதலை ஆா்.சந்திரன், சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மதிமுக சாா்பில் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் வ.கோபால்ராசு, நகரச் செயலாளா் பொன்சேதுபதி, வைகோ ராஜேந்திரன் உள்ளிட்டோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விடுதலைச் சிறுத்தைக் கட்சி மாவட்ட செய்தி தொடா்பாளா் நாராயணன் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.