சத்துணவு மைய ஊழியா்களுக்கு சமையல் போட்டி
By DIN | Published On : 25th December 2020 09:29 AM | Last Updated : 25th December 2020 09:29 AM | அ+அ அ- |

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள பள்ளிகளின் சத்துணவு மைய சமையலா்களுக்கு பயிற்சி, சமையல் போட்டி கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தம்மம்பட்டி நடுநிலைப் பள்ளி முதலிடமும், தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி 2-ஆம் இடமும், கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 3-ஆம் இடமும் பெற்றன. முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளிகளின் சத்துணவு ஊழியா்களுக்கு, கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அந்தோணிமுத்து சான்றிதழ், பரிசு வழங்கினாா்.