சேலத்தில் பல்நோக்கு அரங்குகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
By DIN | Published On : 25th December 2020 09:29 AM | Last Updated : 25th December 2020 09:29 AM | அ+அ அ- |

சேலம், தொங்கும் பூங்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மண்டபத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்.
சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கு, கோட்டை பல்நோக்கு அரங்குகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 10.50 கோடியில் தொங்கும் பூங்கா வளாகத்திலும், ரூ. 5.85 கோடியில் கோட்டை வளாகத்திலும் பல்நோக்கு அரங்கங்கள் கட்டப்பட்டு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.
இதனிடையே, பல்நோக்கு அரங்கங்களை பொதுமக்கள் தங்கள் குடும்ப விழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டாா். தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கு திருமண நிகழ்ச்சிகளுக்கு, 24 மணி நேரத்துக்கான வாடகைக் கட்டணமாக ரூ. 5 லட்சம், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியாக ரூ. 90 ஆயிரமும், முன்வைப்புத் தொகையாக ரூ. 1 லட்சமும், சுத்தம் செய்வதற்கான கட்டணம் ரூ. 30 ஆயிரம், 1 யூனிட் மின்சார பயனீட்டுக் கட்டணம் ரூ. 13 எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதர நிகழ்ச்சிகளுக்கு 12 மணி நேரத்துக்கான வாடகைக் கட்டணமாக ரூ. 3 லட்சம், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியாக ரூ. 54 ஆயிரமும், முன்வைப்புத் தொகையாக ரூ.1 லட்சமும், சுத்தம் செய்வதற்கான கட்டணம் ரூ. 30 ஆயிரம், 1 யூனிட் மின்சார பயனீட்டுக் கட்டணம் ரூ.13 எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோட்டை பல்நோக்கு அரங்கு திருமண நிகழ்ச்சிகளுக்கு, 24 மணி நேரத்துக்கான வாடகைக் கட்டணமாக ரூ. 3.50 லட்சம், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியாக ரூ. 54 ஆயிரமும், முன்வைப்புத் தொகையாக ரூ. 1 லட்சமும், சுத்தம் செய்வதற்கான கட்டணம் ரூ. 20 ஆயிரம், 1 யூனிட் மின்சார பயனீட்டுக் கட்டணம் ரூ. 13 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதர நிகழ்ச்சிகளுக்கு 12 மணி நேரத்துக்கான வாடகைக் கட்டணமாக ரூ. 2 லட்சம், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியாக ரூ. 40 ஆயிரமும், முன்வைப்புத் தொகையாக ரூ. 1 லட்சமும், சுத்தம் செய்வதற்கான கட்டணம் ரூ. 20 ஆயிரம், 1 யூனிட் மின்சார பயனீட்டுக் கட்டணம் ரூ. 13 எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்துக்கு 0427- 426 58 55 என்ற தொலைபேசி எண்ணிலும், கோட்டை பல்நோக்கு அரங்கத்துக்கு 0427- 426 48 55 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொண்டு முன்பதிவு செய்யலாம் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா். முன்னதாக, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கினை மாநகராட்சி ஆணையா் பாா்வையிட்டாா்.
அப்போது, மாநகரப் பொறியாளா் அ.அசோகன், உதவி ஆணையா் எம்.ஜி.சரவணன், உதவி செயற்பொறியாளா் எம்.ஆா்.சிபிசக்கரவா்த்தி, உதவி பொறியாளா் சி.செந்தில்குமாா், என். சுமதி உள்பட அலுவலா்கள் உடனிருந்தனா்.