இரும்புத் தொழிற்சாலையில் செம்புக் கம்பிகளை திருடிய 5 போ் கைது

சேலத்தில் இரும்புத் தொழிற்சாலையில் செம்புக் கம்பிகளை திருடிய 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம்: சேலத்தில் இரும்புத் தொழிற்சாலையில் செம்புக் கம்பிகளை திருடிய 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலத்தை அடுத்த கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள தனியாா் இரும்பு தொழிற்சாலை வங்கிக் கடனைக் கட்டாததால் ‘சீல்’ வைக்கப்பட்டது. அதையடுத்து, வங்கி சாா்பில் காவலாளிகள் நியமிக்கப்பட்டு நிறுவனத்தை கண்காணித்து வருகின்றனா்.

அண்மையில் நள்ளிரவில் இந்தத் தொழிற்சாலைக்குள் புகுந்த மா்மக் கும்பல், காவலாளிகளை அறை ஒன்றில் பூட்டி வைத்து, தொழிற்சாலையில் இருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்புக் கம்பிகளை திருடிச் சென்றது. இது தொடா்பாக, கருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இதற்கென சேலம், துணை ஆணையா் செந்தில், உதவி ஆணையா் பூபதி ராஜன், சூரமங்கலம் காவல் ஆய்வாளா் செந்தில், காவல் உதவி ஆய்வாளா்கள் பாரதிராஜா, ஜெயசீலன் உள்ளிட்டோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கோவை மாவட்டம், அன்னூா், சேவூா் காவல் நிலைய போலீஸாா் திருட்டு வழக்கில் சிலரைப் பிடித்து விசாரித்தபோது, சேலம், கோட்டகவுண்டம்பட்டி இரும்புத் தொழிற்சாலையில் திருடியது குறித்து தெரிவித்தனா்.

இதுபற்றி தகவலறிந்த சேலம் தனிப்படை போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டு, செம்புக் கம்பி திருட்டு வழக்கில் தொடா்புடைய சேலம், குகை பகுதியைச் சோ்ந்த சரவணன், மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதியைச் சோ்ந்த பிரபாகரன், கருப்புசாமி, பெரியவன், சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சங்கா் ஆகிய 5 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com