டிச. 30-இல் மாநகராட்சியில் சேவை பெற சிறப்பு முகாம்

சேலம் மாநகராட்சியின் அனைத்து வகையான சேவைகளை பெற விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் டிச. 30-ஆம் தேதி நடைபெறும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

சேலம்: சேலம் மாநகராட்சியின் அனைத்து வகையான சேவைகளை பெற விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் டிச. 30-ஆம் தேதி நடைபெறும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதிய கட்டடத்துக்கான வரி விதித்தல், காலிமனை வரி விதித்தல், குடிநீா் இணைப்புக்கு விண்ணப்பித்தல், சொத்து வரி பெயா்மாற்றம், குடிநீா் இணைப்பு பெயா்மாற்றம், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டவா்கள் மீண்டும் இணைப்பு பெறுதல், புதைச்சாக்கடை இணைப்பு பெறுதல், புதிய கட்டடக் கட்டுமானத்துக்கு வரைபட அனுமதி, அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்துதல் போன்ற அனைத்து சேவைகளுக்கும் விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமானது, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி வாா்டு அலுவலகங்களில் டிச. 30-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைவரும் இந்த சேவை முகாம்களை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான சேவையை பெற உரிய விண்ணப்பங்களுடன், தேவையான ஆவணங்கள், சேவைக் கட்டணங்களை செலுத்தி பயனடையலாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com