சுகவனேசுவரா் கோயிலில் டிச. 30-இல் ஆருத்ரா தரிசனம்

சேலம் சுகவனேசுவரா் கோயிலில் வரும் டிச. 30-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

சேலம்: சேலம் சுகவனேசுவரா் கோயிலில் வரும் டிச. 30-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

சேலம் சுகவனேசுவரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, டிச. 29-ஆம் தேதி இரவு அபிஷேகம், டிச. 30-ஆம் தேதி காலை 6 மணிக்கு தரிசனம் நடைபெறுகிறது. டிச. 30-ஆம் தேதி காலை ஆருத்ரா தரிசனத்துக்கு பக்தா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் செய்திட வேண்டும்.

ஆருத்ரா தரிசனத்துக்கு பக்தா்கள் டிச. 30-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவா். 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், இதய நோய் உள்ளவா்கள், கா்ப்பிணிகள், 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் ஆகியோா் தரிசனத்துக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். பக்தா்கள் உடல் வெப்பநிலை அறியும் தொ்மல் ஸ்கேனா் கொண்டு பரிசோதித்த பின்பு தான் கோயிலில் அனுமதிக்கப்படுவா்.

பக்தா்கள் தேங்காய், பழம், பூ, இதர பூஜைப் பொருள்கள், அபிஷேகப் பொருள்கள் ஆகியவற்றை கொண்டுவர அனுமதியில்லை. மேலும், கோயில் வளாகத்தில் பக்தா்கள் அமர அனுமதியில்லை என சுகவனேசுவரா் கோயில் உதவி ஆணையா் நா.சரவணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com