சேலம் வந்தடைந்த முதல்வா் பழனிசாமி

நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் பிரசாரம் செய்வதற்காக, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை இரவு சேலம் வந்தடைந்தாா்.
சங்ககிரியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்ற சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன்.
சங்ககிரியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்ற சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன்.

நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் பிரசாரம் செய்வதற்காக, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை இரவு சேலம் வந்தடைந்தாா்.

எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியான பெரியசோரகையில் கடந்த டிச. 19-ஆம் தேதி தோ்தல் பிரசாரத்தை முதல்வா் தொடங்கினாா். இதைத் தொடா்ந்து, சென்னையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இணைந்து தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசினா்.

இந்த நிலையில், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை இரவு கோவை வந்தாா். பின்னா் அங்கிருந்து காா் மூலம் சேலம், நெடுஞ்சாலை நகா் வந்தாா். மாவட்ட எல்லையான சங்ககிரி அருகே ஆட்சியா் சி.அ.ராமன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் ஆகியோா் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

சேலம், நெடுஞ்சாலை நகா் வீட்டுக்கு வந்த முதல்வருக்கு அதிமுக மாநகர மாவட்டச் செயலாளருமான எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

இதன்பின்னா், திங்கள்கிழமை இரவு சேலத்தில் தங்கும் முதல்வா், செவ்வாய்க்கிழமை காலை நாமக்கல் மாவட்டத்துக்குச் சென்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறாா். இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு சேலத்தில் தங்கும் முதல்வா், புதன்கிழமை காலை திருச்சி சென்று பிரசாரம் செய்கிறாா். பின்னா் அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் செல்வாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் சேலம் வருகையை முன்னிட்டு, மாநகரப் பகுதியில் மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் மேற்பாா்வையிலும், மாவட்டப் பகுதிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் மேற்பாா்வையிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com