பொங்கல் பரிசு: நியாயவிலைக் கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி தீவிரம்

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, காவிரிக்கரைப்பகுதிகளில் இருந்து, நியாயவிலைக்கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 
அரசின் பொங்கல் பரிசு தொகுபிற்காக, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் கரும்பு அறுவடை முழுவீச்சில் நடைபெறும் காட்சி.
அரசின் பொங்கல் பரிசு தொகுபிற்காக, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் கரும்பு அறுவடை முழுவீச்சில் நடைபெறும் காட்சி.

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, காவிரிக்கரைப்பகுதிகளில் இருந்து, நியாயவிலைக் கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, மோளப்பாறை உள்ளிட்ட காவிரிப் பாசனப்பகுதிகளில், அதிகப்படியான நிலப்பரப்பில் செங்கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மண்வளம் மற்றும், அதிகப்படியான நீர் ஆதாரத்தால் இப்பகுதியில் விளையும் செங்கரும்புகள் சற்று கூடுதல் ருசியுடன் இருந்து வருகிறது. 
இந்நிலையில் தமிழக அரசு அண்மையில் பொங்கல் பரிசாக ரூ.2500 பணம், மற்றம் அரிச, சர்க்கரை, ஒரு மழுக்கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்களை, நியாயவிலைக் கடைகள் வாயிலாக குடும்ப அடைக்களுக்கு வழங்க உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. 
நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக, எடப்பாடி அடுத்த காவிரிக்கரை பகுதியில் இருந்து, ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் மற்றும் பிற மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், அரசின் பொங்கல் பரிசு வழிக்கிட நியாயவிலைக்கடைகளுக்கு தேவையான செங்கரும்புகளை எடப்பாடி  அடுத்துள்ள காவிரிக்கரை பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து வருகிறன்றன. 
மேலும் இப்பகுதியில் இருந்து அறுவடை செய்யப்படும் செங்கரும்புகள், அதிக அளவில், பெங்களுர, புணே, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பபட்டு வருகிறது. 20 கரும்புகள் கொண்ட 1 கட்டு செங்கரும்பு ரூ350 முதல் 450 வரை விற்பனையாவதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com