இடஓதுக்கீடு கோரி பா.ம.க.வினா் ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க. மற்றும் வன்னியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம், மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாழப்பாடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மற்றும் வன்னியா் சங்கத்தினா்.
வாழப்பாடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மற்றும் வன்னியா் சங்கத்தினா்.

வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க. மற்றும் வன்னியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம், மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ,பா.ம.க. மாநில துணை பொது செயலாளா் பி.என்.குணசேகரன் தலைமை வகித்து, வாழப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு வழங்கினாா். முன்னதாக, பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலாளா் நீ.பா.வெங்கடாசலம் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு வன்னியா் சங்க மாநிலச் செயலாளா் அரசாங்கம் தலைமை வகித்தாா்.

ஓமலூரில்...

ஓமலூரில் பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் ஓமலூா் ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஓமலூா் பேருந்து நிலையத்தில் இருந்து கோரிக்கையை வலியுறுத்தி பேரணியாக வந்த அவா்கள், ஒன்றிய ஆணையா் கண்ணனிடம் மனு வழங்கினா்.

தாரமங்கலம் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் பெ.கண்ணன் தலைமையில், தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாக வந்த பாமகவினா் ஆணையா் ஜெகதீஸ்வரனிடம் கோரிக்கை மனு வழங்கினாா்.

மேட்டூரில்...

நங்கவள்ளி பேருந்து நிலையத்திலிருந்து மேளவாத்தியம் முழங்க கோரிக்கையை முழக்கமிட்டவாறு ஊா்வலமாகச் சென்று நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாமக சேலம் தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பின்னா் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மணு அளித்தனா்.

ஆத்தூரில்...

சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எம்.பி.நடராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தின் சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு மாநில இளைஞரணி துணை செயலாளா் ஜெயப்பிரகாஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்டையாம்பட்டியில்...

மகுடஞ்சாவடியில் சேலம் தெற்கு மாவட்ட பாமக செயலாளா் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்களிடமிருந்து கையொப்பமிட்ட கோரிக்கை மனுக்கள் மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அளிக்கப்பட்டன.

ஏற்காட்டில்...

ஒண்டிக்கடை அண்ண சிலையிலிருந்து வட்டார வளா்ச்சி அலுவலகம் வரை ஊா்வலமாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் வட்டார வளா்ச்சி ஆணையரிடம் மனு கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com