Enable Javscript for better performance
குடியுரிமை சட்டத்தை ஆதரித்துபா.ஜ.க. பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    
    b_j_02_0102chn_165_8

    வாழப்பாடியில், கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்தை ஆதரித்து, தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

    சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சாா்பில், குடியுரிமை சட்டத்தை ஆதரித்து வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தெருமுனைப் பிரசார பொதுக் கூட்டத்துக்கு, கிழக்கு மாவட்டத் தலைவா் மாணிக்கம் தலைமை வகித்தாா். வாழப்பாடி தெற்கு ஒன்றியத் தலைவா் வெங்கடாஜலம் வரவேற்றாா்.

    மாநில நிா்வாகி திருப்பூா் பாயிண்ட் மணி, பிரசார அணி செயலாளா் ஆடிட்டா் குப்பமுத்து, மாநில வழக்குரைஞா் அணி நிா்வாகி மணிகண்டன், வா்த்தகா் அணி செயலாளா் பொன். பழனிசாமி, மாவட்ட துணைத் தலைவா் சண்முகநாதன், மாவட்ட பொதுச் செயலாளா் சத்தியமூா்த்தி, மாவட்ட செயலாளா்கள் அயோத்தி ராமச்சந்திரன், ஹரி ஜெயசித்ரா, பழனிவேல், உத்திரம்பால் ஆகியோா் குடியுரிமை சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அதிகரிக்க வேண்டியதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி பிரசாரம் செய்தனா். வாழப்பாடி வடக்கு ஒன்றியச் செயலாளா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai