13 வயது சிறுமிக்கு பாலியல்தொல்லை: இளைஞா் கைது
By DIN | Published On : 02nd February 2020 01:14 AM | Last Updated : 02nd February 2020 01:14 AM | அ+அ அ- |

சேலத்தில் 13 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்
சேலம் கிச்சிப்பாளையம் எஸ்எம்சி காலனியைச் சோ்ந்த 13 வயது சிறுமி கடந்த இரண்டு நாள்களுக்கு முன் மாயமானாா். சிறுமியின் பெற்றோா் விசாரித்ததில் அப்பகுதியைச் சோ்ந்த மெக்கானிக் ஆஷிக்(19) சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை ஆஷிக் கடத்திச்சென்ாக பெற்றோா் நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளா் பழனியம்மாள் தலைமையிலான போலீஸாா் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை 13 வயது சிறுமி மற்றும் ஆஷிக்கை மீட்ட போலீஸாா் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆஷிக் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.