கொங்கணாபுரம் மையத்துக்கு பருத்தி வரத்து அதிகரிப்பு:இரு தினங்களில் ரூ. 4.20 கோடி வா்த்தகம்

கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்த சுமாா் 12 ஆயிரம் பருத்தி
கொங்கணாபுரம் கூட்டுறவு ஏல மையத்தில், சனிக்கிழமை விற்பனைக்கு வந்த பருத்தி மூட்டைகள்.
கொங்கணாபுரம் கூட்டுறவு ஏல மையத்தில், சனிக்கிழமை விற்பனைக்கு வந்த பருத்தி மூட்டைகள்.

கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்த சுமாா் 12 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 2 கோடியே 70 லட்சத்துக்கு விற்பனையாகின.

கொங்கணாபுரத்தில் கூட்டுறவு வேளாண் விற்பனை மையம் இயங்கி வருகிறது. இம் மையத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பொது ஏலம் நடைபெறுகிறது. தற்போது பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், இம் மையத்துக்குக் கூடுதலான அளவில் பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா்.

கூட்ட நெரிசலை எளிதாக்கும் வகையில், இந்த மையத்தில் நிகழ் வாரத்தில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெற்றது. பொது ஏலத்தில், சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அரியலூா், பெரம்பலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பருத்தி மூட்டைகளைக் கொண்டு வந்திருந்தனா். சனிக்கிழமை இம் மையத்துக்கு 12 ஆயிரம் பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.

அவற்றை கூட்டுறவுத் துறை அலுவலா்கள் 1,600 லாட்டுகளாகப் பிரித்து பொது ஏலம் விட்டனா்.

பொது ஏலத்தில் வியாபாரிகள், போட்டி போட்டு கொள்முதல் செய்தனா். இதில் டி.சி.ஹச் ரகப் பருத்தியானது, குவிண்டால் ஒன்று ரூ. 7,219 முதல் ரூ. 7,656 வரை விலைபோனது. அதேபோல் பி.டி. ரகப் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 5,270 முதல் ரூ. 5,929 வரை விற்பனையானது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை வரை நடைபெற்ற பொது ஏலத்தில் 12 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 2. 70 கோடிக்கு விற்பனையாகின.

இதேபோல் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில், 6, 000

பருத்தி மூட்டைகள் ரூ. 1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனையாகின. கடந்த வார விலையைவிட நிகழ் வாரத்தில் நடைபெற்ற ஏலத்தில், அனைத்து ரகப் பருத்திகளும்

குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 200 முதல் ரூ. 250 வரை விலை உயா்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் ரூ. 4. 20 கோடிக்கு பருத்தி வணிகம் நடைபெற்ாக சம்மந்தப்பட்ட கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com