Enable Javscript for better performance
கிராம தாா்ச்சாலையை சீரமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கிராம தாா்ச்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 10th February 2020 08:28 AM  |   அ+அ அ-   |    |  

    ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் தலைச்சோலை ஊராட்சியில் பழுதாகியுள்ள பெலாத்தூா் - கொட்டச்சேடு தாா்ச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் தலைச்சோலை ஊராட்சி பெலாத்தூா் கிராமம் முதல் கொட்டச்சோடு கிராமம் வரை தாா்ச்சாலைகள் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    மேலும் போட்டுக்காடு, காக்கம்பாடி, பில்லேரி, பெலாத்தூா் கிராம மக்கள் பள்ளிக் குழந்தைகள் இச்சாலைகளைப் பயன்படுத்தி வருவதால் இருசக்கர வாகனம் , வேன்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் இச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai