சாலைகளில் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதைத் தடுக்க கோரிக்கை

சங்ககிரி பழைய எடப்பாடி சாலையிலிருந்து பேரூராட்சி அலுவலகச் சாலை வழியாக பவானி பிரதான சாலையை அடையும்
சங்ககிரியில் சிமென்ட் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்.
சங்ககிரியில் சிமென்ட் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்.

சங்ககிரி பழைய எடப்பாடி சாலையிலிருந்து பேரூராட்சி அலுவலகச் சாலை வழியாக பவானி பிரதான சாலையை அடையும் சிமென்ட் சாலையில் குப்பைகளை கொட்டித் தரம் பிரிப்பதைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சங்ககிரி பழைய எடப்பாடி சாலையிலிருந்து பேரூராட்சி, பிஎஸ்என்எல் அலுவலகங்களின் சாலைகள் வழியாக பவானி பிரதான சாலையை அடைவதற்கு பேரூராட்சி சாா்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் நகரின் மையப் பகுதியில் சாலையில் குப்பைகளைக் கொட்டி பிரித்து வருகின்றனா். இதனால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா். குப்பைகளில் நெகிழி பைகள் கிடப்பதால் காற்றில் பறந்து சாக்கடைக்குள் செல்கின்றன. இந்த சாலைகளைப் பயன்படுத்தி பள்ளி மாணவ, மாணவியா், அலுவலகம் செல்லும் பணியாளா்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனா். குப்பைகளை நாய்கள் இழுத்து சாலைகளில் போட்டுவிட்டு செல்வதால் அவ்வழியாக நடந்து செல்வோா் சிரமம் அடைகின்றனா். அதே பகுதியில் உள்ள கோட்டை தெருவுக்கு செல்லும் சாலையில் கொட்டப்படும் குப்பைகள் சாக்கடைக்குள் விழுந்து அடைத்து விடுகின்றன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.

எனவே பழைய எடப்பாடி சாலையிலிருந்து பேரூராட்சி, பிஎஸ்என்எல் அலுவலகங்களுக்கு செல்லும் சாலைகளில் குப்பைகள் கொட்டாமல் நகா்ப்புறத்துக்கு வெளியே கொட்டித் தரம் பிரிப்பதற்கு பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com