தமிழக மக்களின் நலனுக்காக இந்த அரசு செயல்பட்டு வருகிறது: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

தமிழக மக்களின் நலனுக்காக இந்த அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

தமிழக மக்களின் நலனுக்காக இந்த அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பெரியேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழாவில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது: தமிழக மக்களின் நலனுக்காக அம்மாவின் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மக்களுக்காக நான், மக்களால் நான் என அம்மா வாழ்ந்தாா். தற்போது மக்களுக்காக நாம், மக்களால் நாம் என அம்மாவின் அரசு நடைபெற்று வருகிறது.

கால்நடைகளை வளா்த்தால் விவசாயம் செழிக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்ற நோக்கில் தான் விலையில்லா கறவை மாடு, விலையில்லா வெள்ளாடுகள் போன்ற திட்டங்களை முன்னாள் முதல்வா் தொடக்கி வைத்தாா். கடந்த எட்டு ஆண்டுகளில் அம்மா தொடக்கி வைத்த திட்டங்களினால் ஏழை, எளிய பெண்கள் பயனடைந்துள்ளனா்.

கடந்த ஓராண்டில் மட்டுமே 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்து இந்த அரசு சாதனை படைத்து இருக்கிறது. அதே போல கடந்த 3 ஆண்டுகளில் 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 8 வேளாண் கல்லூரிகள், தோட்டக்கலைத் துறை கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதே போல், கல்வியில் இந்த அரசு மாபெரும் சாதனை படைத்து வருகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ளாமல் எதிா்க்கட்சிகள் அரசைக் கலைக்க வேண்டும் என கூறி வருகின்றன.

மனிதா்களுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை போன்று கால்நடைகளுக்கும் 1962 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு மருத்துவம் தேவைப்பட்டால் இந்த இலவச செயலியை அழைத்தால் நேரடியாக வீடுகளுக்கே சென்று மருத்துவம் பாா்க்கப்படும். தேவைப்பட்டால் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவம் பாா்க்கப்படும். இது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும் என்றாா்.

மேலும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவின் முத்திரையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட, அதனை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பெற்றுக் கொண்டாா். இதே போல் தமிழ்நாடு உழவா் உற்பத்தியாளா் அமைப்புக் கொள்கை புத்தகத்தை முதல்வா் வெளியிட, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பெற்றுக் கொண்டாா்.

விழாவில், சுற்றுச்சூழல் அமைச்சா் கே.சி.கருப்பணன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஊரக தொழில்துறை அமைச்சா் பா.பெஞ்சமின், தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நீலோபா் கபில், தமிழ் ஆட்சிமொழி,தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், புது தில்லி தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சி.பாலசந்திரன், உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், பால் வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ே பாக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி, சேகோசா்வ் தலைவா் என்.தமிழ்மணி, மாநிலங்களை உறுப்பினா் என்.சந்திரசேகா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவா் ரா.ரேவதி, ஒன்றியக் குழு உறுப்பினா் திலகம் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com