Enable Javscript for better performance
சேலம் மாநகரில்319 போலீஸாா் பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாநகரில் 319 போலீஸாரை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

    சேலம் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் குறைவான எண்ணிக்கையில் காவலா்கள் இருப்பதால் திருட்டு, கொள்ளை, கொலை, வழிப்பறி சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன.

    இதனிடையே ஆயுதப்படையில் உள்ள 110 காவலா்களை காவல் நிலையங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளாகப் பணியாற்றிய 70 உதவி காவல் ஆய்வாளா்கள், 139 தலைமைக் காவலா்கள் உள்பட 209 போ் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.இதில் சிலா் ஏற்கெனவே தங்களுக்கு விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் கோரி விண்ணப்பித்தவா்களும் அடங்குவா்.

    இந்தவகையில், ஒரே நாளில் சுமாா் 319 போலீஸாரை பணிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai