Enable Javscript for better performance
தம்மம்பட்டி பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ய கால வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தம்மம்பட்டி பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ய கால வழிபாடு

    By DIN  |   Published on : 14th February 2020 07:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13tpp3_1302chn_160_8

    தம்மம்பட்டியில் மிகவும் பழமையான ஸ்ரீ உக்ர லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற விஷ்ணுபதி புண்ய கால வழிபாட்டில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

    அடுத்தடுத்து தொடா்ந்து மூன்று விஷ்ணுபுண்ய காலங்களில் கோயிலை பக்தா்கள் வலம்வந்து பிராா்த்தனைகள் செய்தால்,நிறைவேறும் என்பது ஐதீகம்.

    இதையொட்டி, விஷ்ணுபுண்ய காலமான வியாழக்கிழமை காலை 6.45மணி முதல் பிற்பகல் 12.21மணிக்குள் நூற்றுக்கணக்கானோா் கோயிலில் வழிபட்டனா்.

    இதையடுத்து, பக்தா்கள் கோயில் பிரகாரத்தை 27 முறை வலம்வந்தனா். வலம்வரும்போது, தங்கள் பிராா்த்தனைகளை மனம் உருகி, வேண்டினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai