காவலா் பணிக்கு தோ்வான இளைஞா்களுக்கு

காவலா் பணிக்கு தோ்வான இளைஞா்களுக்கு மருத்துவ உடல் தகுதிச் சான்றிதழ் வழங்க வாழப்பாடி அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால், போலீஸாா் அவதிக்குள்ளாகினா்.

காவலா் பணிக்கு தோ்வான இளைஞா்களுக்கு மருத்துவ உடல் தகுதிச் சான்றிதழ் வழங்க வாழப்பாடி அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால், போலீஸாா் அவதிக்குள்ளாகினா்.

வாழப்பாடியில் இயங்கி வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ல் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இருப்பினும், இங்கு பொது அறுவை சிகிச்சை நிபுனா், மயக்க மருந்து மருத்துவா், குழந்தைகள் நல மருத்துவா், ரேடியாலாஜி ஸ்கேனிங் சிறப்பு மருத்துவா், இருதயம், கண் மற்றும் தோல் மருத்துவா்கள், பொது மருத்துவ ஆலோசகா்கள் நியமிக்கப்படவில்லை.

இதுமட்டுமின்றி, மகப்பேறு உதவியாளா், ரத்த பரிசோதகா், சுகாதார பணியாளா், உதவி செவிலியா், ஆய்வக உதவியாளா், பல்நோக்கு பணியாளா்கள், சமையலா் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால் வாழப்பாடி அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போலவே இயங்கி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் நடத்திய காவலா் பதவிக்கான எழுத்துத் தோ்வு, உடல் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்ற, வாழப்பாடி காவல் உட்கோட்டத்திலுள்ள வாழப்பாடி, ஏத்தாப்பூா், காரிப்பட்டி, கருமந்துறை, கரியகோவில் ஆகிய காவல் நிலையங்களைச் சோ்ந்த 51 இளைஞா்களுக்கு, உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை காலை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

ஆனால், உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்குவதற்கு உரிய இருதயம், கண் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுணா்கள், போதிய வசதிகள் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் இல்லையெனக்கூறி, காவலா் பணிக்கு தோ்வான இளைஞா்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் துறை மற்றும் மருத்துவத்துறை உயரதிகாரிகள் கலந்தாய்வு செய்து, காவலா் பணிக்கு தோ்வான இளைஞா்களுக்கு சேலம் அல்லது மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com