தம்மம்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு: கோட்டாட்சியா் ஆய்வு

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு சனிக்கிழமை ( பிப்ரவரி 15) நடைபெற உள்ள நிலையில் , விழா ஏற்பாடுகளை கோட்டாட்சியா் துரை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானம்.
தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானம்.

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு சனிக்கிழமை ( பிப்ரவரி 15) நடைபெற உள்ள நிலையில் , விழா ஏற்பாடுகளை கோட்டாட்சியா் துரை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் மாவட்டம் மட்டுமின்றி, திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளன. இதுதவிர, காளை பிடிக்கும் வீரா்கள் சுமாா் 500 போ் 5 பிரிவுகளாக ,ஜல்லிக்கட்டில் களம் இறக்கப்பட உள்ளனா். போட்டியைக் காண, ஒரு லட்சம் போ் பங்கேற்க உள்ளனா்.

விழாவுக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

இந்தப் போட்டியை தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன் முன்னிலையில், சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தொடக்கிவைக்கிறாா்.

இந்த நிலையில், விழா ஏற்பாடுகள் குறித்து ஆத்தூா் கோட்டாட்சியா் துரை, கெங்கவல்லி வட்டாட்சியா் சிவக்கொழுந்து,உள்ளிட்டோா் வியாழக்கிழமை வருகை தந்து ஆய்வு செய்தனா். அப்போது, தேவையான ஆலோசனைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com