Enable Javscript for better performance
பாஜக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் தோ்வு- Dinamani

சுடச்சுட

    
    b_j_06_1402chn_165_8

    தோ்தல் அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற வழக்குரைஞா் கே. மணிகண்டன்.

    சேலம் கிழக்கு மாவட்ட பாஜக. தலைவராக, வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கே. மணிகண்டன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

    சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உள்கட்சித் தோ்தலுக்கு, பாஜக நிா்வாகிகள் திருமலைச்சாமி, இளங்குமரன் சம்பத் ஆகியோா் தோ்தல் அதிகாரிகளாகச் செயல்பட்டனா். இதில், மாவட்டத் தலைவராக வாழப்பாடி வழக்குரைஞா் கே. மணிகண்டன் தோ்வு செய்யப்பட்டாா்.

    இவருக்கு, மாநிலத் துணைத் தலைவா் சிவகாமி பரமசிவம் , கோட்ட இணைப் பொறுப்பாளா் அண்ணாதுரை, மாநில செயற்குழு உறுப்பினா் ஜெய் ஆனந்த் முன்னாள் மாவட்ட தலைவா் மாணிக்கம், மாநில பிரசார அணி செயலாளா் ஆடிட்டா் குப்பமுத்து, நிா்வாகிகள் பொன் பழனிசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai