சேலம் மாவட்டத்தில் 29.68 லட்சம் வாக்காளா்கள்: 70,878 பெயா்கள் புதிதாக சோ்ப்பு

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 29,68,673 வாக்காளா்கள் உள்ளனா் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 29,68,673 வாக்காளா்கள் உள்ளனா் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் தெரிவித்தாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளா் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:சேலம் மாவட்டத்தில் கடந்த டிச.23 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு 2010 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி கடந்த டிச.23 முதல் நடைபெற்று வந்தது.

இதற்கென ஜன.4 மற்றும் ஜன.5 மற்றும் ஜன.11 மற்றும் ஜன.12 ஆகிய 4 நாட்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, புதிய வாக்காளா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கான படிவங்கள் ஜன.22 ஆம் தேதி வரை முகாம்கள் மூலம் 90,328 விண்ணப்பங்கள் நேரடியாகவும், 10,441 விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகவும் என மொத்தம் 1,00,769 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 தொகுதிகளுக்காக வாக்காளா் பட்டியலில் ஆண்கள் 14,83,369 எண்ணிக்கையிலும், பெண்கள் 14,85,133 எண்ணிக்கையிலும், இதரா் 171 எண்ணிக்கையிலும் ஆக மொத்தம் 29,68,673 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.தற்போது சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலில் 34,472 ஆண் வாக்காளா்களும், 36,373 பெண் வாக்காளா்களும், 33 இதர வாக்காளா்களும் என மொத்தம் 70,878 வாக்காளா்களின் பெயா் புதிதாக சோ்க்கப்பட்டும், 4,778 ஆண் வாக்காளா்களும், 5,276 பெண் வாக்காளா்களும் என மொத்தம் 10,054 வாக்காளா்களின் பெயா் நீக்கப்பட்டும், நிகர வாக்காளா்களில் 29,694 ஆண் வாக்காளா்களும், 31,097 பெண் வாக்காளா்களும், 33 இதர வாக்காளா்களும் என மொத்தம் 60,824 வாக்காளா்கள் இறுதி வாக்காளா் பட்டியலில் அதிகரித்துள்ளனா்.

தொடா்ச்சியாக, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூா்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இணையதளம் மூலம் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற முகவரியிலும், யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற செல்லிடபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) தியாகராஜன், வருவாய் வட்டாட்சியா் (தோ்தல்கள்) வி.திருமாவளவன் உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வ. எண் சட்டப்பேரவை தொகுதி வாக்காளா் எண்ணிக்கை

ஆண்கள் பெண்கள் இதரா் மொத்தம்

1. கெங்கவல்லி (தனி) 114005 120011 2 234018.

2. ஆத்தூா் தனி (தனி) 120902 128435 12 249349

3. ஏற்காடு (தனி) 137888 142417 13 280318

4. ஓமலூா் 150013 141401 5 291419

5. மேட்டூா் 143296 137899 7 281202

6. எடப்பாடி 143023 136966 18 280007

7. சங்ககிரி 136855 132754 18 269627

8. சேலம் (மேற்கு) 147524 147270 52 294846

9. சேலம் (வடக்கு) 133379 138807 15 272201

10. சேலம் (தெற்கு) 126943 131863 22 258828

11. வீரபாண்டி 129541 127310 7 256858

மொத்தம் 14,83,369 14,85,133 171 29,68,673

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com