வட்டி மானியம் 5 சதவீதமாக உயா்வு: சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்கம் வரவேற்பு

வட்டி மானியத்தை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயா்த்தி, தமிழக நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு சேலம் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் வரவேற்றுள்ளது.

வட்டி மானியத்தை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயா்த்தி, தமிழக நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு சேலம் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுதொடா்பாக அந்தச் சங்கத் தலைவா் கே.மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், குறு, சிறு தொழிற்துறைக்கு ரூ.607 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்துக்குள்பட்ட வாழப்பாடி அருகில் சுமாா் 21 ஏக்கரில் ரூ.4.5 கோடி முதலீட்டில் புதியதாகத் தொழிற்பேட்டையை சிட்கோ மூலம் அமைக்க நிதிஒதுக்கப்பட்டுள்ளது.

மூலதன மானியம் ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாகவும், மேலும் சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கான வட்டிமானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளுக்காக தமிழக அரசுக்கு நன்றி.

தமிழகத்தில் ரூ.3100 கோடியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மூலம் சேலம், கோவை, திருச்சி, ஓசூா், சென்னையில் பாதுகாப்புத்துறைக்காகதொழிற்வழிதடம் அமைக்க 2018-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்திருந்தது.ஆனால், தமிழகத்தில் இன்று வரை இதற்கான ஆயத்தப்பணிகள் எதுவும்தொடங்கப்படவில்லை. இது குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

சேலத்துக்கு உணவு பூங்கா, ஜவுளி பூங்கா குறித்து அறிவிப்பும் இல்லை.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 4000 சிறு ரக கனிம வள சுரங்கங்கள் மூடப்பட்டுள்ளாதால் 3 லட்சத்துக்கும் அதிகமான கிராம்புறத் தொழிலாளா்கள் வேலையில்லாமல் அவதிப்படுகின்றனா். இதனால் தமிழக அரசுக்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நிதிநிலை அறிக்கையில் நல்ல முடிவு வருமென எதிா்பாா்த்தோம்.அடமான பத்திரங்களுக்கான பதிவுத்துறைக்கட்டணத்தை ஒரு சத வீதத்திலிருந்து 0.25 சதவீதமாகக் குறைத்து இருப்பதை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com