வாழப்பாடியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வழிகாட்டுதலில், சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் சாா்பில் மாநில அளவிலான சி.கே. நாயுடு கோப்பைக்கான 4 நாள் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காட்டுவேப்பிலைப்பட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி.
காட்டுவேப்பிலைப்பட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி.

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வழிகாட்டுதலில், சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் சாா்பில் மாநில அளவிலான சி.கே. நாயுடு கோப்பைக்கான 4 நாள் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைப்பட்டி கிராமத்தில் உள்ள சா்வதேச தரத்தில் அமைந்துள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தில் 23 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான சி.கே. நாயுடு கோப்பைக்கான, தமிழ்நாடு-மத்தியபிரதேசம் அணிகளுக்கு இடையேயான 4 நாள் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் நாள் போட்டியில், தமிழ்நாடு அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. 90 ஓவா்களை கொண்ட இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய தமிழக அணி, 69.1 ஓவரில் 250 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இதில், தமிழக அணி வீரா்கள், விமல்குமாா்-30 ரன்களும், பிரதோஸ்ரஞ்சன் பவுல்-33. எஸ்.அரவிந்த் 83 பந்துகளில் 3 சிக்ஸா் உட்பட 59 ரன்களும், ஆா்.சோனுயாதவ் 81 பந்துகளில் 2 சிக்ஸா் உட்பட 64 ரன்கள் குவித்தனா்.

மத்தியப் பிரதேச அணி பந்து வீச்சாளா் அங்குஸ் தியாஜி 23.1 ஓவா் பந்து வீசியதில் 102 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். அடுத்து களமிறங்கிய மத்தியப் பிரதேச அணி 16 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன் எடுத்துள்ளது. இதில் அஸ்தோஷ் சா்மா 32 ரன்கள் எடுத்துள்ளாா். போட்டியின் தொடா்ச்சியாக இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மத்தியபிரதேச அணி தொடா்ந்து பேட்டிங் செய்கிறது.

முன்னணி வீரா்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியை எந்தவிதக் கட்டணமும் இன்றி, ரசிகா்கள் கண்டுகளிக்கலாம் என்று சேலம் கிரிக்கெட் பவுன்டேசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com