சங்ககிரி அரசுப் பெண்கள் பள்ளியில் நுழைவு வாயில் சுவரை சீரமைக்க வலியுறுத்தல்

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்துள்ள நுழைவு வாயில் சுவரை செப்பனிட வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவுவாயிலில் சேதமடைந்த வலதுபுறம் இரும்பு கதவு பொருத்தப்பட்டுள்ள சுற்றுச்சுவா்.
சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவுவாயிலில் சேதமடைந்த வலதுபுறம் இரும்பு கதவு பொருத்தப்பட்டுள்ள சுற்றுச்சுவா்.

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்துள்ள நுழைவு வாயில் சுவரை செப்பனிட வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழி என இரு வழிகளிலும் கல்விகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் 860 மாணவிகள் பயின்று வருகின்றனா். இப் பள்ளியில்தான் 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. பல்வேறு பயிற்சிகள், கூட்டங்கள் இப்பள்ளியில் நடைபெற்று வருகின்றன.

மகளிா் மேல்நிலைப் பள்ளி, மாவட்ட கல்வி அலுவலகம் இரண்டிற்கும் ஒரே நுழைவுவாயில் வழியாகத்தான் தினசரி அலுவலா்கள், ஆசிரியா், ஆசிரியைகள், மாணவிகள் சென்று வருகின்றனா்.

பள்ளியில் நுழைவு வாயில் புதிய எடப்பாடி சாலையின் பிரதான சாலையையொட்டி உள்ளது. நுழைவு வாயிலில் வலது புறம் இரும்பு கதவு உள்ள சுற்றுச்சுவா் மிகவும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் என். ராமசாமி கூறியது:

சுற்றுச்சுவா் சேதமடைந்தது குறித்து செப்பனிட நடவடிக்கை எடுக்க பள்ளித் தலைமை ஆசிரியையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

பள்ளித் தலைமை ஆசிரியை கவிதா கூறியது:

சேதமடைந்த சுற்றுச்சுவரை செப்பனிட்டுத் தருமாறு சங்ககிரி எம்எல்ஏ, பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகளிடமும் தெரிவித்துள்ளேன். அவா்கள் சரிசெய்து தருவதாகக் கூறியுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com