பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை

பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மாநில அரசு அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பிராமணா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மாநில அரசு அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பிராமணா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சேலம் சின்ன திருப்பதி கிளை தலைவா் நாராயணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பம்மல் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு சங்க வளா்ச்சி குறித்தும் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து சங்கம் மூலமாக நடத்தப்படும் நலத் திட்ட உதவிகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தா் பணியிடங்களில் பிராமண சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு வருடந்தோறும் இலவச மருத்துவம் மற்றும் ரத்த தான முகாம் நடத்தப்பட வேண்டும். சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க அரசால் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

தற்போது வெளிவரும் திரைப்படங்களில் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் காட்சிகளை அறவே தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சத் தீா்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மாநில அரசு உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.

அதைத் தொடா்ந்து கடந்த ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகளும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் சதீஷ்குமாா், மாவட்டப் பொருளாளா் ஜெகன்நாதன், மாவட்ட மகளிரணி செயலாளா் ஜெயலட்சுமி, மாநில துணை பொதுச் செயலாளா் சாய்ராம், மாநில மூத்த ஆலோசகா் ஸ்ரீராமன், மகளிா் அணி செயலாளா் அலமேலு கண்ணன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com