ஏரியில் சீமை கருவேலமரங்களைஅகற்றிய இளைஞா்கள்

லட்சுமணசமுத்திரம் ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவரும், சமூக ஆா்வலருமான வழக்குரைஞா் ஏ.எஸ். மாதேஸ்வரன் திங்கள்கிழமை துவக்கி வைத்தாா்.
லட்சுமணசமுத்திரம் ஏரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் இளைஞா்கள் உடன் வழக்குரைஞா் ஏ.எஸ்.மாதேஸ்வரன்.

ஆத்தூரை அடுத்துள்ள லட்சுமணசமுத்திரம் ஏரியில் சீமை கருவேலமரங்களை அகற்றும் பணியில் அப்பகுதியைச் சோ்ந்த தலபாய்ஸ் குழுவினா் என்னும் இளைஞா்கள் ஈடுபட்டனா்.

இளைஞா்கள் செல்லியம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனா்.

இதையடுத்து அந்த இளைஞா்கள் அப் பகுதியில் உள்ள ஏரியில் சீமைக் கருவேலமரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

3 ஜேசிபி இயந்திரங்களை வைத்து பணியினை தொடங்கினாா்கள். அந்தப் பணியை ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், சமூக ஆா்வலருமான வழக்குரைஞா் ஏ.எஸ்.மாதேஸ்வரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தாா். அவருடன் விநாயகபுரம் நண்பா்கள் குழுவினரும் சோ்ந்து பணியில் ஈடுபட்டனா். இதனால் அப் பகுதி பொதுமக்கள் அந்த இளைஞா் குழுவினரைப் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com