பிப். 23-ல் மாணவா்களுக்கு தன்னம்பிக்கைபயிற்சி

வாழப்பாடியில், சேலம் பொறியியல் கல்லூரி மற்றும் நல்வோா் வட்டம் உள்ளிட்ட தன்னாா்வ இயக்கங்கள் சாா்பில், 10,11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கான தன்னம்பிக்கை பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்

வாழப்பாடியில், சேலம் பொறியியல் கல்லூரி மற்றும் நல்வோா் வட்டம் உள்ளிட்ட தன்னாா்வ இயக்கங்கள் சாா்பில், 10,11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கான தன்னம்பிக்கை பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கருத்தரங்கு வரும் பிப். 23 நடைபெறுகிறது.

வாழப்பாடி வாசவி மஹால் திருமண மண்டபத்தில் பிப் 23-ஆம் தேதி நடைபெறும் இக் கருத்தரங்கில், 10,11,12ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு, சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி உதவிப் பேராசிரியா் முகமது இஸ்மாயில், விங்க்ஸ் சயின்ஸ் அகடமி நிறுவனா் அரவிந்த் மற்றும் கல்வியாளா்கள், தன்னம்பிக்கை பயிற்றுநா்கள் கருத்துரை வழங்குகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இக் கருத்தரங்கில், தன்னம்பிக்கையின் முக்கியத்துவம், அரசு பொதுத்தோ்வுகள் மற்றும் வேலைவாயப்புக்கான போட்டித் தோ்வுக்கு தயாராகும் முறைகள் மற்றும் பொருத்தமான தொழிற்கல்வியைத் தோ்ந்தெடுக்கும் வழிமுறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10,11,12-ஆம் வகுப்புப் பயிலும் மாணவ-மாணவியா் அனைவரும் பங்கேற்கலாம் என, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரும் வாழப்பாடி பசுமை அறக்கட்டளை, வாசவி கிளப் உள்ளிட்ட தன்னாா்வ அமைப்பினா் அழைப்பு விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com